/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் மாலையோடு நிறைவு
/
விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் மாலையோடு நிறைவு
விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் மாலையோடு நிறைவு
விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் மாலையோடு நிறைவு
ADDED : ஏப் 18, 2024 04:54 AM
விருதுநகர்: விருதுநகரில் நேற்று பா.ஜ., காங்., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகளின் இறுதிகட்ட பிரசாரம் நடந்தது.
விருதுநகர் லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். காங். சார்பில் சிட்டிங் எம்.பி., மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் போட்டியிடுகிறார். மார்ச் 31ல் இறுதி வேட்பாளர் வெளியான நாள் முதல் களத்தில் சூடுபிடித்த பிரசாரம் 17 நாட்களாக நடந்து நேற்றுடன் நிறைவு பெற்றது.
பா.ஜ.,
அருப்புக்கோட்டையில் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவின் ரோடு ஷோ, கட்சியினரின் டூவீலர் ஊர்வலம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். நகர்ப்பகுதிகளில் வலம் வந்து மெட்டுக்குண்டு, கடம்பன்குளம், நமசிவயபுரம், புதுப்பட்டி, காளபெருமாள்பட்டி, மன்னார்கோட்டை, நல்லான்செட்டிபட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தனர்.
மாலையில் விருதுநகரில் நடந்த டூவீலர் ஊர்வலம் ரயில்வே காலனியில் துவங்கி ராமமூர்த்தி பால சர்வீஸ் ரோடு, கம்பர் தெரு, மணி நகரம், முத்துராமன்பட்டி, கட்டையாபுரம், பர்மா காலனி, மீனாம்பிகை பங்களா, ஏ.டி.பி., காம்பவுன்ட், கிழக்கு பாண்டியன் காலனி, மதுரை ரோடு, வி.வி.ஆர்., சிலை அருகில், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் நிறைவடைந்தது. இதில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா ஓட்டு சேகரித்தார். பா.ஜ.,வினர் லோக்சபாவின் திருமங்கலம், திருப்பரங்குன்றம், சிவகாசி தொகுதிகளிலும் ஊர்வலம் சென்றனர்.
தி.மு.க., கூட்டணி
காங்., அருப்புக்கோட்டையில் பாவடி தோப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை, அகம்படியர் மஹால், சொக்கலிங்கபுரம், காந்தி நகர் பகுதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கை சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் விலைவாசி குறையும். மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும். பத்து ஆண்டுகளாக அவர் ஆட்சியில் விலைவாசி கூடிக் கொண்டே தான் செல்கிறது. தப்பி தவறி அவர் ஜெயித்து விட்டால் மீண்டும் அதே கதை தான். விலைவாசி உயர்வு பெண்களுக்கு தான் அதிகம் தெரியும். சிலிண்டர் விலையும் கூடியுள்ளது.
இங்கு, எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.பி., யும் நானே. எனக்காக ஓட்டு போடுங்கள். 50 ஆண்டுகளாக உங்களுடன் நான் பயணித்து வருகிறேன். உங்களிடம் ஓட்டு கேட்க எனக்கு உரிமை உண்டு. உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பேன். என்றார்.
அ.தி.மு.க., கூட்டணி
தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது: நான் மாரியம்மன் கோயிலில் வழிபட்டு பிரசாரத்தை துவங்கி தற்போது இங்கேயே பிரசாரத்தை நிறைவு செய்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயிக்க அருப்புக்கோட்டை தொகுதியை கொடுத்தது விருதுநகர் மாவட்டம். ஜி.எஸ்.டி.,யால் குட்டி ஜப்பான் என்ற சிவகாசி பாதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழில் இன்று முடங்கி உள்ளது. சீன லைட்டர்களால் அம்மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். பட்டாசு, தீப்பெட்டி, விவசாயம் ஆகிய மூன்றும் உயிர்மூச்சு. இதை விஜயபிரபாகரன் மீட்டெடுப்பார். என் மகனைவிருதுநகர் தொகுதி மக்கள் வசம் ஒப்படைத்து விட்டேன். எங்களின் 46 வாக்குறுதிகள் அளித்துள்ளேன். எம்.பி., நிதியின் அனைத்து பணமும் மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். என்றார்.
நாம் தமிழர் கட்சி
விருதுநகர் லோக்சபா தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் நேற்று மாலை 4:30 மணிக்கு எட்டூர் வட்டம் டோல்கேட்டில் இருந்து திறந்தவெளி காரில் நின்றபடி ஊர்வலமாக வந்து ஓட்டு சேகரித்தார். சாத்துார் மெயின் ரோட்டில் கார், டூவீலரில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்.

