/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலைகளில் உரிம எண் எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதி
/
பட்டாசு ஆலைகளில் உரிம எண் எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதி
பட்டாசு ஆலைகளில் உரிம எண் எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதி
பட்டாசு ஆலைகளில் உரிம எண் எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதி
ADDED : மே 10, 2024 11:59 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் உரிம எண், எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஒரு வார காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு :
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சிவகாசி பயிற்சி மையம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியில் பங்கு பெறாத 200 தொழிற்சாலைகளில் உள்ள உரிமதாரர்கள் போர் மேன்கள், தொழிலாளர்கள் இரண்டு மாத காலத்திற்குள் பயிற்சி பெற வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் உள்ள உரிம அறிவிப்பு பலகையில் உரிமம் எண், எவ்வகையான பட்டாசுகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை ஒரு வார காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிய நான்கு சிறப்பு ஆய்வு குழுக்கள் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழுக்கள் பட்டாசு தொழிற்சாலையில் முழுமையாக ஆய்வு செய்து சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் தொழிற்சாலை பற்றி அறிக்கை அளிக்கும், ஆய்வு குழுவின் அறிக்கையின் படி தொழிற்சாலைகளின் மீது தற்காலிக நிறுத்த உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சரியாக ஆய்வு செய்யாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி ஏதேனும் செயல்படுவதாக தெரியவரும் பட்சத்தில் அது குறித்தான தகவல்களை காவல்துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள 94439 67578 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.