/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை முடிந்தும் குறையாத ஒண்டிப்புலி நீர்மட்டம்
/
கோடை முடிந்தும் குறையாத ஒண்டிப்புலி நீர்மட்டம்
ADDED : ஜூலை 19, 2024 06:20 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் ஒண்டிப்புலி குடிநீர் தேக்கத்தின் நீர்மட்டம் கோடை முடிந்தும் குறையாமல் உள்ளது.
விருதுநகர் நகராட்சியில் ஆனைக்குட்டம் உறைகிணறுகள் மூலம் 20 லட்சம் லிட்டர் வரையும், பழைய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் 20 லட்சம் லிட்டரும், புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் 30 லிட்டரும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மெயின் குழாய் பதித்து முழுவீச்சில் புதிய தாமிரபரணி திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் 60 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வினியோகம் ஆகும் என்கின்றனர்.
இந்நிலையில் கோடை தோறும் கூடுதல் குடிநீர் தேவைக்காக ஒண்டிப்புலி குடிநீர் தேக்கமும், காரிசேரி போர்வெல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை ஆனைக்குட்ட குடிநீரின் உவர்ப்பு தன்மையால் நகராட்சி குடிநீர் சற்று உவர்ப்பாக தான் உள்ளது. இந்தாண்டு கோடை பயன்பாட்டிற்கு ஒண்டிப்புலி குடிநீர் தேக்கம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நல்ல மழை பெய்த காரணத்தாலும், பைப்லைன் பழுது உள்ளிட்ட காரணங்களாலும் 20 நாட்களிலே பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கோடை முடிந்தும் தற்போது வரை ஒண்டிப்புலி நீர்மட்டம் 50 அடி வரை குறையாமல் உள்ளது.
இந்நிலையில் ஆனைக்குட்டம் உவர்ப்பு குடிநீருக்கு பதிலாக இந்த குடிநீரை கொடுத்தாலாவது மக்கள் நிம்மதி அடைய வாய்ப்புள்ளது. புதிய தாமிரபரணி திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வர இன்னும் நாட்கள் ஆகும். எனவே நகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை அவசர பயன்பாட்டிற்கு இதை பயன்படுத்தவாவது பைப்லைன் வழித்தடங்களை இப்போதே சரி செய்ய துவங்க வேண்டும்.