/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தரமற்ற வாறுகால், சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு அவதியில் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் மக்கள்
/
தரமற்ற வாறுகால், சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு அவதியில் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் மக்கள்
தரமற்ற வாறுகால், சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு அவதியில் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் மக்கள்
தரமற்ற வாறுகால், சேதமடைந்த பேவர் பிளாக் ரோடு அவதியில் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் மக்கள்
ADDED : மார் 26, 2024 11:52 PM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே புறநகர் பகுதியில் தரமற்ற முறையில் வாறுகால், பேவர் பிளாக் கற்கள் பதித்ததால், தெரு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து திருக்குமரன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தலைவர் தாமஸ், செயலர் ராஜாராம், உறுப்பினர்கள் பெருமாள்சாமி, கந்தவேல், வனிதா, தமிழரசி, பாபு கணேஷ் கூறியதாவது:
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது திருக்குமரன் நகர். இதில், 9 தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி ஆண்டுகள் ஆன போதிலும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
6வது தெருவில், 1 மாதத்திற்கு முன்பு, பேவர் பிளாக் கற்கள் பதித்தனர். தரமற்ற பணியால் வாகனம் வந்ததில் கற்கள் பெயர்ந்து மேடும், பள்ளமுமாக மாறி விட்டது. இதே தெருவில் அமைக்கப்பட்ட வாறுகால் கட்டியசில நாட்களில் இடிந்தது. பின்னர், அவசர அவசரமாய் 2 முறையாக வாறுகால் அமைத்தனர்.
சீராக இல்லாததால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. 8வது தெருவில் ரோடு இல்லாமல், கிடங்காக உள்ளது. தெருவில் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
பல தெருக்களில் மின் விளக்கு வசதிகள் போதுமானதாக இல்லை. தெருக்களில் 2022ல், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்காக பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டது.
பின்னர், பேவர் பிளாக் கல் பதிக்க தோண்டியதால், குழாய்கள் பல பகுதிகளில் சேதமடைந்து விட்டது. சரி செய்யாமல் கற்களை பதித்து விட்டனர். குழாய்களில் தண்ணீர் வரும் போது, சேதமடைந்த பகுதிகளில் தண்ணீர் வெளியேறி வீணாகி விடும். 2வது தெருவில் வாறுகாலை உயர்த்தி அமைத்துள்ளதால், மழை காலங்களில் தண்ணீர் தெருவில் தேங்கி விடும்.
பிரச்னைகள் குறித்த ஊராட்சியில் பல முறை புகார் கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை. தெருக்களில் உள்ள அனைத்து வாறுகாலின் கழிவுநீர் பிரதான வாறுகாலில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

