/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிழற்குடை இல்லை, செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் சிவலிங்காபுரம் ஊராட்சி மக்கள்
/
நிழற்குடை இல்லை, செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் சிவலிங்காபுரம் ஊராட்சி மக்கள்
நிழற்குடை இல்லை, செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் சிவலிங்காபுரம் ஊராட்சி மக்கள்
நிழற்குடை இல்லை, செயல்படாத சுகாதார வளாகம் அவதியில் சிவலிங்காபுரம் ஊராட்சி மக்கள்
ADDED : மே 07, 2024 05:04 AM

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே மகளிர் சுகாதார வளாகம் காட்சி பொருளாக இருந்து வருவது, வசதிகள் இல்லாத மயானம், தெருவின் நடுவே கழிவு நீர் அமைப்பு என அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து சிவலிங்காபுரம் ஊராட்சி மக்கள் உள்ளனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சிவலிங்காபுரம் ஊராட்சியில் குடல்புரி நத்தம், சிவலிங்காபுரம் கிராமங்கள் உள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சி என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் சிவலிங்காபுரத்தில் உள்ள 2 பொது சுகாதார வளாகங்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் கண்மாய் ஓடை, ஊர் நுழைவுப் பகுதி ரோட்டோரங்களையும் திறந்தவெளியாக பயன்படுத்தும் அவலம் உள்ளது.
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளைக்கு தோண்டிய தெருக்களில் பணிகள் முடிவடையாததால் வாகனங்கள் தடுமாறுகின்றன. அடிதட்டு மக்கள் அதிகம் குடியிருந்து வரும் குடல்புரி நத்தம் குடியிருப்பில் மயானத்தில் அடிப்படை வசதியில்லை. மெயின் ரோட்டில் இருந்து கிராமத்திற்கு வரும் பிரதான பாதை மண் ரோடாக உள்ளது.
குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு செயல் வடிவத்திற்கு வரவில்லை. மேல்நிலை தொட்டி துாண்கள் பலமின்றி காணப்படுகிறது. சமுதாயக்கூடம் இல்லாததால் திருமணம் சடங்கு உள்ளிட்ட விசேஷங்களுக்கு ரோட்டோரங்களையே பயன்படுத்தும் நிலை உள்ளது.
இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் மழை வெயிலில் ஒதுங்க நிழற்குடை வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேறவில்லை. தெரு நாய்கள் கூட்டமாக திரிவதால் இரவு நேரங்களில் தெருவில் நடக்க மக்கள் பயப்படுகின்றனர்.