/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான குடிநீர் தொட்டி; , செயல்படாத சுகாதார வளாகம்; சிரமத்தில் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சி மக்கள்

ADDED : ஆக 27, 2024 05:58 AM

விருதுநகர் : சேதமான மேல்நிலைக் குடிநீர் தொட்டி, செயல்படாத சுகாதார வளாகங்கள், அரசு பஸ் வரத்து இல்லாமல் பயணிகள் அவதி, சமுதாயக்கூடம் இல்லை உள்பட பல்வேறு பிரச்னைகளுடன் சிரமத்தில் வசிக்கின்றனர் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சி மக்கள்.
சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். விருதுநகர் - சாத்துார் நான்கு வழிச்சாலையில் இப்பகுதியினர் திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்கள் நிற்க பஸ் ஸ்டாப் கட்டப்பட்டது.
ஆனால் பஸ் ஸ்டாப் தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
சத்திரரெட்டியப்பட்டியில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டி சேதமாகி சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. இதன் மேற்பரப்பில் மூடி இல்லாமல் திறந்து நிலையில் உள்ளது. இப்பகுதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமாகி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. ரயில்வே கேட் அருகே உள்ள அடிகுழாய் சேதமாகி பல மாதங்களாகிறது.
ஊருக்குள் வர வேண்டிய அரசு பஸ் முறையாக வந்து செல்வதில்லை. இதனால் மக்கள் விருதுநகர், பிற பகுதிகளுக்கு செல்ல நான்கு வழிச்சாலையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சமுதாயக்கூடம் இல்லை. இங்குள்ள ஊருணியை துார்வாரி 10 ஆண்டுகள் ஆகிறது. இதில் தற்போது கழிவு நீர் கலப்பது அதிகரித்து முட்புதர்கள் அடர்ந்து நிறைந்துள்ளது.