/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல மாதங்களாகியும் கிடப்பில் ரோடு பணி
/
பல மாதங்களாகியும் கிடப்பில் ரோடு பணி
ADDED : ஏப் 29, 2024 05:12 AM

நரிக்குடி: பல மாதங்கள் ஆகியும் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லிக்கற்களில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நரிக்குடி - விலக்குசேரி கிராமத்திற்கு வீரசோழன் மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ., துாரம் உள்ளது. இந்த ரோடு படுமோசமானதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ரோடை சீரமைக்க அக்கிராமத்தினர் வலியுறுத்தினர். 8 மாதங்களுக்கு முன் ரோடு போடும் பணி துவங்கப்பட்டது. ரோட்டில் ஜல்லிக் கற்கள் விரித்தனர். அதற்குப்பின் பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போட்டனர்.
மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. இரவு நேரங்களில் டூ வீலரில் செல்பவர்கள் இடறி விழுந்து காயம் ஏற்படுகிறது. ஆத்திர அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அக்கிரமத்தினரின் நலனை கருத்தில் கொண்டு ரோடு பணியை முழுமையாக முடித்து தர நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

