/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளியில் இல்லை அடிப்படை வசதிகள்
/
பள்ளியில் இல்லை அடிப்படை வசதிகள்
ADDED : மார் 23, 2024 05:04 AM
சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு இவர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை இல்லை. தவிர மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற பெற்றோர், தங்களது பிள்ளைகளை வெளியில் அழைத்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, சிவக்குமார், பள்ளியில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்றனர்.

