/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான அருப்புக்கோட்டை பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் வாகன ஓட்டிகள் அவதி
/
சேதமான அருப்புக்கோட்டை பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் வாகன ஓட்டிகள் அவதி
சேதமான அருப்புக்கோட்டை பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் வாகன ஓட்டிகள் அவதி
சேதமான அருப்புக்கோட்டை பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஏப் 07, 2024 06:17 AM

விருதுநகர் : விருதுநகர் - அருப்புக்கோட்டை பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் பல மாதங்களாகியும் இது வரை சீரமை க்கப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகரின் எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் பாலத்தின் அடிப்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்டது. இந்த ரோட்டின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டது.
குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இவ்வழியாக டூவீலர், ஆட்டோ, காரில் செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியோர் என அனைவரும் இந்த ரோட்டை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு வாகனத்தில் வருபவர்கள் பேவர் பிளாக் கற்கள் பள்ளங்களில் இடறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கதையாக உள்ளது.
நகரின் மற்ற பகுதியில் புதிய ரோடுகள் அமைக்கும் நகராட்சியினர் பல மாதங்களாக சேதமாகி உள்ள பேவர் பிளாக் கற்கள் ரோட்டை சீரமைக்க தயக்கம் காட்டுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. எனவே பேவர் பிளாக் கற்கள் ரோட்டை உடனடியாக சீரமைப்பதற்கான பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

