ADDED : செப் 01, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் ; சாத்துார் வெங்கடாஜலபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி இவர் மனைவி சங்கரேஸ்வரி, 42. இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது . பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 கால் பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. டி.எஸ்.பி.சுரேஷ்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தார். சாத்துார் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.