/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை ஓடைகள் அடைபடும் அபாயம்
/
நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை ஓடைகள் அடைபடும் அபாயம்
நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை ஓடைகள் அடைபடும் அபாயம்
நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை ஓடைகள் அடைபடும் அபாயம்
ADDED : ஏப் 28, 2024 06:09 AM

விருதுநகர், ; விருதுநகர் நான்கு வழிச்சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பையால் ஓடைகள் அடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்பு கொட்டப்பட்ட குப்பையே இன்றும் பெரிய தலைவலியாக இருந்து வருகின்றன.
நான்கு வழிச்சாலை குறுக்காக நீர்வரத்து ஓடைகள், கழிவுநீர் ஓடைகள் செல்கின்றன. இவை எவ்வித தங்கு தடையின்றி செல்வது அவசியம். ஆனால் சில ஓடைகள் அவ்வாறு செல்வதில்லை. நான்கு வழிச்சாலையில் சிவகாசி ரோட்டின் அருகே மர்ம நபர்கள் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். இவை தற்போது ஓடை இருக்கும் பகுதியிலும் கொட்டப்பட்டுள்ளதால் ஓடை அடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் முறைப்படி நான்குவழிச்சாலை அடிப்பகுதி ஓடை வழியாக நீர் வெளியேறாது.
தற்போது சிவகாசி ரோட்டின் சர்வீஸ் ரோடு பகுதிகளில் பெரிய அளவில் குடியிருப்புகள் இல்லை. ஆதலால் இது எதுவும் பெரிய பிரச்னையாக மக்களுக்கு இருக்கப் போவதில்லை. இருப்பினும் ஓடைகள் பிளாஸ்டிக் குப்பையால் அடைபடுவது நாளடைவில் பாதிப்பை தான் தரும். ரோட்டின் அடிப்புறம் இவை செல்வதால் மழைக்காலங்களில் அதிக மழையில் நீர் அடித்து சென்றால் மட்டுமே ஏற்கனவே புதர்மண்டிய மண் அகலும். தற்போது குப்பையும் சேர்ந்து விட்டால் அவை மேலும் மேலும் புதர்மண்டும் சூழல் தான் ஏற்படும்.
எனவே சர்வீஸ் ரோடு பகுதிகளில் இரவோடு இரவாக வந்து குப்பை கொட்டி செல்வதை தடுக்க வேண்டும்.

