/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க.,வுக்கு அழிவு என்பதே கிடையாது
/
அ.தி.மு.க.,வுக்கு அழிவு என்பதே கிடையாது
ADDED : ஆக 17, 2024 12:48 AM
சிவகாசி : மத்தியில் மாநிலத்தில்ஆளும் கட்சிகள் நமக்கு துாசு தான். அ.தி.மு.க.,வுக்கு அழிவு என்பதேகிடையாது. என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசியில் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.
இதில் தலைமை வைத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
அ.தி.மு.க., வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. கட்சியை வைத்து பிழைக்க நினைப்பவர்களுக்கு இங்கே இடம் இல்லை. எந்த கட்சியிலும் பிரச்னை இல்லாமல் இல்லை.
லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என பிரித்து பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த லோக்சபா தேர்தலில்மோடி வேண்டுமா என்று ஒரு அணி, மோடி வேண்டாமா என்று ஒரு அணி. அதையும் தாண்டி அ.தி.மு.க., தனது ஓட்டு வங்கியை நிரூபித்து உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமின்றி பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
அ.தி.மு.க., ஆட்சியின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. தி.மு.க., செய்யாத திட்டங்களையும் செய்ததாக விளம்பரப்படுத்தி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக வெள்ள பாதிப்புக்கு, மதுரை எய்ம்ஸ் மற்றும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதை கண்டித்து, தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் பிரதமரை முற்றுகையிட்டு இருந்தால் நான் சல்யூட் அடித்து இருப்பேன்.
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டே இல்லை. சாட்சியாபுரம், திருத்தங்கல், இருக்கன்குடியில் மேம்பாலம் கட்ட நான் அமைச்சராக இருந்த போது அரசாணை பெற்று, நிதி ஒதுக்கீடு பெற்று தந்தேன். ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கவில்லை.
சிவகாசி சுற்றுச் சாலை பணிக்கு அனுமதி பெற்று எனது இடம் 4 ஏக்கரை அளித்தேன். இன்னமும் பணி தொடங்கவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போது ' கோ - பேக்' மோடி என்று கருப்பு பலுான் பறக்க விட்ட தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அமைதியாகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

