/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது
/
திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது
ADDED : மே 31, 2024 06:31 AM

விருதுநகர் : விருதுநகர் பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரன் 52. இவர் வீட்டில் மே 27ல் பீரோவை உடைத்து 3 பவுன் செயின் திருடப்பட்டது.
இந்த திருட்டில் ஈடுபட்ட விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சிக்கந்தர் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
சூலக்கரை திரு.வி.க., நகரைச் சேர்ந்த கோதையாண்டாள் 72, ஏப். 26 காலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றார். அப்போது டூவீலரில் வந்து அடையாளம் தெரியாத இருவர் கோதையாண்டாள் அணிந்திருந்த 5 1/4 பவுன் செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரம்ஜாத் 23, மற்றொரு வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை சிறையில் இருந்த முகம்மது ஷான் 24, ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விருதுநகர் ஜே.எம்., 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.