/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெவ் வேறு சம்பவங்களில் மூவர் தற்கொலை
/
வெவ் வேறு சம்பவங்களில் மூவர் தற்கொலை
ADDED : மார் 01, 2025 06:24 AM
சிவகாசி : சிவகாசியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் உட்பட வேறு வேறு சம்பவங்களில் மூவர் தற்கொலை செய்துகொண்டனர்.
சிவகாசி விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மனைவி வடகத்தியம்மாள் 37. இவர்களுக்கு 11, 9 வயது இரு குழந்தைகள் உள்ளனர்.
வடகத்தியம்மாள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதால் அவரது கணவர் திட்டினார். இந்நிலையில் வடக்கத்தியம்மாள் வீட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவரது மகன் ஷாஜகான் 23, பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
பெற்றோரிடம் சங்கர பாண்டியபுரம் அருகே ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் திருமணம் முடிக்க சம்மதம் கேட்டுள்ளார். வயது குறைவாக உள்ளதால் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என அறிவுரை கூறியதால் சோகமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் தூக்கிட்டு இறந்தார். கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார் 35. இவர் சில நாட்களாக மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். அவரது மனைவி கண்டித்தார்.
இந்நிலையில் சரவணகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.--