/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் நாளை பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
/
ஸ்ரீவி.,யில் நாளை பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ஸ்ரீவி.,யில் நாளை பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ஸ்ரீவி.,யில் நாளை பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED : ஏப் 07, 2024 06:07 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (ஏப். 8) பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 28ல் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நாளை (ஏப். 8) மதியம் 2:00 மணிக்கு துவங்குகிறது. இதனை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மார்க்கெட் ரோட்டில் காலை 6:00 மணிக்குள் சரக்கு லாரிகள் பொருட்களை இறக்கிவிட்டு சென்றுவிட வேண்டும். அதன் பிறகு அனுமதியில்லை.
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்த அனுமதி இல்லை.
ராஜபாளையம், சிவகாசியில் இருந்து வரும் பஸ்கள் வழக்கம்போல் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வரலாம். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி செல்லும் பஸ்கள் மார்க்கெட் ரோடு, டவுன் போலீஸ் ஸ்டேஷன், சர்ச் வழியாக செல்ல வேண்டும்.
தேனி, மதுரை, வத்திராயிருப்பு பகுதியில் இருந்து வரும் பஸ்கள் காமராஜர் சிலை, சின்ன கடை வீதி வழியாக பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும்.
மதுரை, தேனி செல்லும் பஸ்கள் ஆத்துக்கடை, காமராஜர் சிலை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக செல்ல வேண்டும். சின்ன கடை பஜார், மார்க்கெட் ரோடு, மாரியம்மன் கோவில் அருகில் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி இல்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அறிவித்துள்ளது.

