ADDED : ஜூலை 15, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூலை 10 -
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் துறை, ஏ.சி.எம்., அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் பைத்தான் கோடிங் ஸ்கில்ஸ் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். அமெரிக்கா டெக்சாஸ் பல்கலை கணினி அறிவியல் கல்வி மற்றும் வெளிப்பாட்டல் மையம் இயக்குனர் ஜெய் வீரசாமி பேசினார். முகாமில் 200 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் ராமதிலகம், பழனிக்குமார் செய்தனர்.
