/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை குவிக்கும் இடமாக டிரான்ஸ்பார்மர்கள்--- விபத்துக்கு முன் தேவை விழிப்புணர்வு

ADDED : ஆக 05, 2024 07:30 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் நகர், சுற்று பகுதியில் டிரான்ஸ்பார்மர்களை ஒட்டி குப்பை கொட்டும் இடமாக மாறி வருவதை மின்வாரிய துறையினர், உள்ளாட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுவாக தெருமுனைகளில், ரோட்டோரங்களில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள் கேட்பாரற்ற இடமாக இருப்பதால் குடியிருப்பு வாசிகள் வழிப்போக்கர்கள் குப்பைகள் போட்டு செல்வது வாடிக்கையாக மாறி உள்ளது.
டிரான்ஸ்பார்மர் அருகே மொத்தமாக குவியும் குப்பைகள் அகற்றப்படாததுடன் இவற்றில் தீ வைப்பதால் மின்தடைக்கு காரணமாகிறது. இதே நிலை குடியிருப்புகளுடன் ராஜபாளையம் குடியிருப்பு பகுதிகள், சத்திரப்பட்டி மெயின் ரோடு, சேத்துார், தளவாய்புரம் சாலைகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கும் ஏற்பட்டு வருவதால் மின்வாரிய அலுவலர்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நகர், கிராமப்புறங்களில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடங்களை மக்கள் குப்பைகள் போட்டு செல்கின்றனர். விளையாட்டாக சிலர் தீ வைப்பதால் டிரான்ஸ்பார்மர் வரை தீ பரவி விபத்துகள் ஏற்படுவதுடன் மின்தடைக்கு காரணமாகிறது.
அத்துடன் இவற்றின் பராமரிப்பின் போது இவற்றை சுற்றி சேர்ந்துள்ள குப்பையும் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.