/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளை
/
ரோட்டில் முறிந்து விழும் நிலையில் மரக்கிளை
ADDED : ஆக 21, 2024 06:49 AM

சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் ரோட்டில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விழும் நிலையில் ரோட்டை மறைத்து இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி இரட்டைப்பாலம் விலக்கில் இருந்து சிறுகுளம் கண்மாய் வழியாக கட்டளைப் பட்டி செல்லும் ரோடு மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் இதில் சென்று வரும்வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கட்டளைப்பட்டி விலக்கு அருகே ரோட்டோரத்தில் உள்ள கருவேல மரத்தின் கிளை முறிந்து விழும் நிலையில் உள்ளது. இது ரோட்டின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதனால் இரவில் டூவீலரில் வருபவர்கள் தொங்கி கொண்டிருக்கும் கிளையை கவனிக்காமல் விபத்தில் சிக்கிகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது மரக் கிளை முறிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் தற்காலிகமாக அடையாளம் ஏற்படுத்தும் வகையில் சாக்கு கட்டி வைக்கப்பட்டுள்ளது.
சாட்சியாபுரத்தில் ரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் துவங்கியுள்ள நிலையில் பெரும்பான்மையான வாகனங்கள் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன. எனவே முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளையை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

