ADDED : ஜூலை 01, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரை குளம் தெரு பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் இருந்த பழமையான மரம் ஒன்று, நேற்று மதியம் 2:30 மணிக்கு திடீரென வீசிய காற்றில் முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் அவ்வழியாக நடந்தோ, டூவீலரிலோ செல்லவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும் அருகிலுள்ள ஓட்டலின் மேற்கூரை சேதமடைந்தது. நகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
நகரில் பஜார் வீதிகள், தெருக்களில் உள்ள மரங்களிலும் தனி நபர்கள் விளம்பரம் போர்டுகள் பொருத்துவதற்கு ஆணி அடிப்பதால் மரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
