/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலத்தில் மரம்; பலம் இழக்கும் அபாயம்
/
பாலத்தில் மரம்; பலம் இழக்கும் அபாயம்
ADDED : ஏப் 29, 2024 05:07 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள மேம்பாலத்தின் சுவற்றில் அரச மரம் வளர்ந்து இருப்பதால், பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அருப்புக்கோட்டை காந்தி நகர் அருகே மதுரை -- துாத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் துாத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட ஊர்களுக்கு செல்கின்றன.
துாத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் அதிக எடை உள்ள சரக்குகளை கொண்டு செல்கின்றன. பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு சுவர்கள் உள்ளன. இதில், அருப்புக் கோட்டையிலிருந்து சாய்பாபா கோயில் செல்லும் சர்வீஸ் ரோட்டில் அருகில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரசமரம் வளர்ந்து உள்ளது.
அரச மரத்தின் வேர்கள் பெரியதாக நீண்டு வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு பாலத்தின் உறுதித் தன்மை குறையும் அபாயத்தில் உள்ளது. இதேபோன்று பாலத்தின் கீழ் பகுதியில் மரங்கள் வளர்ந்து வருகின்றன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தா விட்டால், தடுப்புச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து பாலத்தை பராமரிக்க வேண்டும்.

