/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜவுளி பூங்காவில் மரக்கன்று நடும் பணிகள் துவங்கியதோடு நிற்குது: எடுத்த நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க எதிர்பார்ப்பு
/
ஜவுளி பூங்காவில் மரக்கன்று நடும் பணிகள் துவங்கியதோடு நிற்குது: எடுத்த நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க எதிர்பார்ப்பு
ஜவுளி பூங்காவில் மரக்கன்று நடும் பணிகள் துவங்கியதோடு நிற்குது: எடுத்த நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க எதிர்பார்ப்பு
ஜவுளி பூங்காவில் மரக்கன்று நடும் பணிகள் துவங்கியதோடு நிற்குது: எடுத்த நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 25, 2025 07:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் 51 சதவீத நிதி பங்களிப்பு, மாநில அரசின் 49 சதவீத நிதி பங்களிப்பில் 1052 ஏக்கரில் சிப்காட் நிலத்தில் ஒருங்கிணைந்த பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான இ.குமாரலிங்கபுரம் வரையிலான ரோடு விரிவாக்க பணி, திட்ட அலுவலகம் கட்டும் பணி வேகம் எடுத்து நடந்து வருகிறது.
இ.குமாரலிங்கபுரத்தை மையமாக கொண்டு அருகில் உள்ள அச்சம்பட்டி, கோவில்புலிக்குத்தி கிராமங்கள் வரை இந்த ஜவுளி பூங்கா பெரிய அளவில் அமைகிறது. 2 லட்சம் பேர் வேலை பெற உள்ளனர்.
ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செயப்பட உள்ளன. ஒரு ஏக்கரில் சிப்காட் அலுவலகம் அமைய உள்ளது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் இருந்து குமாரலிங்கபுரத்திற்கு செல்லும் ரோடு 30 மீட்டர் அகலத்திற்கு மாநில நெடுஞ்சாலைத்துறையால் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு விட்டது. சிப்காட் திட்ட அலுவலக கட்டுமான பணியும் முடிந்து விட்டது. நில எடுப்பிற்குள் வரும் இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் 2024 டிச. ல் இரவோடு இரவாக அனுமதியின்றி மரங்களை வெட்டி மர்ம நபர்கள் கபளீகரம் செய்தனர்.
இதற்கு வேலி அமைத்து மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது வரை வேலி அமைக்கப்படாமல் உள்ளது. அதே போல் நில எடுப்பு பகுதிக்கு மையத்தில் இ.குமாரலிங்கபுரம் கண்மாயும் வருகிறது.
இந்த கண்மாயில் கனிமவள கொள்ளையார்கள் கைவரிசை காட்டி சென்றதால் அப்பகுதியில் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜவுளி பூங்காவின் மற்ற பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நிலம் எடுக்கப்பட்ட பரப்பிற்குள் பாதுகாப்பு வேலி அமைத்து ஜவுளி பூங்காவிற்கு எடுக்கப்பட்ட நிலம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
ஜவுளி பூங்கா அமையும் போது பசுமை சுற்றுச்சூழலுக்கு மரங்களின் இருப்பு அவசியமாகிறது. இதற்காக டிச. 20ல் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. இப்பணிகள் அடுத்தகட்டத்திற்கு நகராமல், நட்ட மரக்கன்றுகளோடே நிற்கிறது. மேலும் நடுவதற்காக வாங்கி வைக்கப்பட்ட மரக்கன்றுகளும் நடப்படாமல் வெயிலில் காய்ந்து வருகின்றன.