/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
1.6 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது
/
1.6 டன் ரேஷன் அரிசி கடத்தல் இருவர் கைது
ADDED : மே 23, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 23. மதுரை காமராஜபுரம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் 25.
இவர்கள் விருதுநகர் அருகே பாலவநத்தம், சத்திரரெட்டியப்பட்டி பகுதிகளில் இருந்து 40 கிலோ வீதம் 40 மூடைகளில் மொத்தம் 1.6 டன் ரேஷன் அரிசியை மதுரைக்கு மே 21 மதியம் 1:00 மணிக்கு லாரியில் கடத்த முயன்றனர்.
விருதுநகர் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் கண்டறிந்து பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களை விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

