/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டட வேலை செய்வதுபோல் வீட்டில் திருடிய இருவர் கைது
/
கட்டட வேலை செய்வதுபோல் வீட்டில் திருடிய இருவர் கைது
கட்டட வேலை செய்வதுபோல் வீட்டில் திருடிய இருவர் கைது
கட்டட வேலை செய்வதுபோல் வீட்டில் திருடிய இருவர் கைது
ADDED : மார் 01, 2025 04:20 AM
சிவகாசி : கட்டட வேலை செய்வது போல் வந்து சிவகாசி அருகே வீட்டில் திருடிய மதுரை, தேனியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே நாரணாபுரத்திலுள்ள ஒரு வீட்டில் ஒரு மாதத்துக்கு முன் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்தது.
வீட்டில் தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். கைரேகை பதிவுகளை ஆய்வு செய்த போது, பழைய குற்றவாளியான மதுரையை சேர்ந்த வீரணன் 30, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அலைபேசி டவர் மூலம் ஆய்வு செய்த போது, வீரணன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்தது தெரியவந்தது.
சிவகாசி போலீசார் ஒட்டன்சத்திரம் சென்று வீரணன் அவருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த அஜித் 28, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் கட்டட வேலை செய்வது போல் வந்து, ஆளில்லாத வீட்டை குறிவைத்து திருடி உள்ளனர்.
இவர்களுக்கு வேறு ஏதும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.