/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுத்தம் செய்யப்படாத ஓடை, மூடி கிடக்கும் சுகாதார வளாகம்
/
சுத்தம் செய்யப்படாத ஓடை, மூடி கிடக்கும் சுகாதார வளாகம்
சுத்தம் செய்யப்படாத ஓடை, மூடி கிடக்கும் சுகாதார வளாகம்
சுத்தம் செய்யப்படாத ஓடை, மூடி கிடக்கும் சுகாதார வளாகம்
ADDED : மே 25, 2024 04:58 AM
சாத்துார் : சாத்துார் அண்ணா நகரில் வாறுகால் சுத்தம் செய்யப்படாத நிலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
அண்ணா நகரின் ரோட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள வீடுகள் பள்ளத்தில் உள்ளதால் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.
வாறுகால் மீது ஆக்கிரமிப்பு செய்து கடைகள் போட்டு உள்ளனர். இதனால் சாக்கடையை சுத்தம் செய்ய முடியாமல் நகராட்சி பணியாளர்கள் திரும்பும் நிலை உள்ளது.
அண்ணா நகர் நடுவில் செல்லும் இரண்டு ஓடைகளில் பக்கவாட்டு சுவர் இல்லை . மேலும் ஓடைகள் உள்ளே முள் செடி புதர்போல் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
மேலும் அண்ணா நகரில் திறந்த வெளி கழிப்பிடத்தை ஒழிப்பதற்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிப்பவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாவதால் நகர்ப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.

