/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
/
வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ADDED : மே 25, 2024 05:16 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இக்கோயிலில் கடந்த ஆண்டு முதல் கோயில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயில் தரைத்தளம் சீரமைத்தல், தட்டோடு பதித்தல், ராஜகோபுரம் புனரமைத்து வர்ணம் பூசுதல் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்தது.
தற்போது பெரும்பாலான திருப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 2 காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கள்ளது. தற்போது கோயில் உட்பிரகரத்தில் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளி பிரகாரத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில் முன்பகுதியில் யாகசாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) முத்து மணிகண்டன் உட்பட ஊழியர்கள் செய்து வருகின்றனர்.