/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு
/
ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு
ADDED : மே 25, 2024 05:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்ஸவம் நிறைவு நாளை முன்னிட்டு தயிர் சாதம், பால் மாங்காய் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் மே 14 முதல் வைகாசி வசந்த உற்ஸவம் துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் மாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாடவீதி, ரத வீதி சுற்றி திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளினர். அங்கு கோதாஸ்த்துதி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபாடு செய்து வந்தனர்.
நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு தயிர் சாதம் ,பால்மாங்காய் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தயிர் சாதமும், பால் மாங்காயும் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானம் வந்தடைதலுடன் வசந்த உற்ஸவம் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்திருந்தனர்.

