/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வன்னி விநாயகர் கோயிலில் கழிப்பிட வசதி இன்றி அவதி
/
வன்னி விநாயகர் கோயிலில் கழிப்பிட வசதி இன்றி அவதி
ADDED : செப் 11, 2024 12:19 AM

சாத்துார் : சாத்துார் மடம் சின்ன ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலில் கழிப்பறை வசதியின்றி பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ளது மடம் சின்ன ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயில். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க உரிய வசதியின்றி திறந்த வெளியை நாடும் அவல நிலை உள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தி வரும் கட்டணக் கழிப்பறையில் ஆண்களுக்கான கழிப்பறைகள் சேதமடைந்துள்ளது. பெண்கள் கழிப்பறையும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தென் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் வாகனங்கள் பல மடம் சின்னஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர். கோயில் உண்டியல் மூலம் வரும் வருமானத்தில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குளியலறை, தங்கும் விடுதி வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.