/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விசாக கொடியேற்றம்
/
வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விசாக கொடியேற்றம்
ADDED : மே 15, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நேற்று கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
கொடிமரம், பலிபீடத்திற்கு மஞ்சள், தயிர், இளநீர், திருமஞ்சனம் உட்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மே 15ல் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

