/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
/
மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மார் 24, 2024 01:04 AM

விருதுநகர், : விருதுநகர் லோக்சபா தொகுதியில் தேர்தல் நடைமுறையில் உள்ள நிலையில் மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு அதிகப்படியான பணம் கொண்டு செல்வதையும், தேர்தல் விதி மீறல் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பை துவக்கி உள்ளனர். நான்கு வழிச்சாலையில் தடுப்புகள் அமைத்து கார்களை சர்வீஸ் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்துகின்றனர்.
சர்வீஸ் ரோட்டில் நிற்கும் போலீசார் காரின் டிக்கி, உட்பகுதிகளை ஆய்வு செய்த பின் பயணிக்க அனுமதிக்கின்றனர். பணம் உள்ளதா என்றும், பரிசு பொருட்கள் ஏதேனும் எடுத்து செல்கின்றனரா என்பதை இந்த சோதனை மூலம் கண்காணிக்கின்றனர். தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் இது போன்ற சோதனைகள் தீவிரமடைந்துள்ளன.

