/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெப்பம் நவீனபடுத்துவதை பாதியில் விட்ட நகராட்சி பணியை முடித்த விவேகானந்த கேந்திரா
/
தெப்பம் நவீனபடுத்துவதை பாதியில் விட்ட நகராட்சி பணியை முடித்த விவேகானந்த கேந்திரா
தெப்பம் நவீனபடுத்துவதை பாதியில் விட்ட நகராட்சி பணியை முடித்த விவேகானந்த கேந்திரா
தெப்பம் நவீனபடுத்துவதை பாதியில் விட்ட நகராட்சி பணியை முடித்த விவேகானந்த கேந்திரா
ADDED : மார் 07, 2025 07:03 AM

அருப்புக்கோட்டை, மார்ச் 7--
அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் தெப்பக்குளத்தை நகராட்சி நவீனப்படுத்துவதாக கூறி பணியை பாதியில் நிறுத்தியதை விவேகானந்த கேந்திரா தொடர்ந்து பணியை செய்து குளத்தை துாய்மையாக மாற்றினர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் தெப்பக்குளத்தை பராமரிக்காததால் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.
இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி நிதி மூலம் தெப்பத்தை பராமரித்து சுற்றிலும் பேவர் பிளாக் கற்கள் பதித்து மின் விளக்குகள் சிசிடிவி கேமராக்கள் வசதிகள் செய்யப்படும் எனக்கோரி பல லட்சம் ரூபாய் நிதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
பின்பு பணிகள் நடந்து தெப்பத்தின் ஒரு பகுதி மட்டும் பேவர் பிளாக் கற்கள், சில மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. விளக்குகள் பொருத்தப்படவில்லை. அத்துடன் நகராட்சி பணியை கிடப்பில் போட்டு விட்டது.
பின்னர் தொழிலதிபர் செந்தில் குமார், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவினர் தெப்ப குள பணிகளை மீண்டும் துவங்கினர். சுமார் 60 லட்சம் ரூபாயில் தெப்பக்குளம் துார்வாரப்பட்டது.மழை நீர் சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டது. தெப்பத்தை சுற்றிலும் உள்ள படித்துறைகள் பராமரிக்கப்பட்டு 8 அடி உயரத்திற்கு கம்பி வலையால் பென்சிங் அமைக்கப்பட்டது.
தெப்பத்திற்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெப்பத்தின் நடுவில் போர்வெல் அமைத்து அங்கு கல் மேடை அமைக்கப்பட்டு தினமும் தண்ணீர் வரும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது. தற்போது தேங்கியுள்ள மழை நீரில் அல்லி, ஆகாய தாமரைகள் வளர்க்கப்பட்டுள்ளன. கழிவு நீர் குளமாக கிடந்த தெப்பக்குளம் தற்போது தூய்மையான குளமாக மாறிவிட்டது.
கதிரேசன், மேற்பார்வையாளர், கன்னியாகுமரி: எங்கள் விவேகானந்த கேந்திராவின் இயற்கை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெப்பக்குளம் புனரமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் அமைப்பு மூலம் 10 ஆண்டுகளில் இதுவரை 55 தீர்த்த குளங்களை பராமரித்துள்ளோம்.
இந்த தெப்பக்குளம் 56வது குளமாக பராமரிப்பு பணிகள் செய்து வருகிறோம். தெப்பக்குளத்தை இப்பகுதி மக்களும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.