ADDED : ஆக 03, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 4–
ராஜபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 269 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில், ஓட்டு எண்ணிக்கையில் 2வது இடம் பிடித்த தி.மு.க., வேட்பாளர் தங்கபாண்டியன், 14 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணிக்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளார்.
இப்பணி பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினரால், வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் ஜூலை 29 முதல் ஆக. 3 வரை நடந்தது.
இச்சரிபார்ப்பு நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இயந்திரங்களும் சரி பார்க்கப்பட்டன. இயந்திரத்தில் எந்தவிதமான மாற்றமோ அல்லது முறைகேடோ இல்லை என்று பெல் பொறியாளர் சான்றளித்துள்ளார்.
அதன் நகல் வேட்பாளர் பிரதிநிதியிடம் வழங்கப்பட்டது.
