ADDED : ஜூலை 22, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கடலுார் மாவட்டத்தில் பருவகால பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து விருதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியக்கூடிய நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் விருதுநகரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.
பணியாளர் காட்டு ராஜா தலைமை வகித்தார். நெல் கொள்முதல் மைய பருவ கால பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள பாக்கியை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் நடைபெறவில்லை.
