ADDED : ஜூலை 08, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூலை 9-
சிவகாசி அருகே காரிசேரியில் மக்கள் தொடர்பு திட்ட முகம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வம் முன்னிலை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 177 பயனாளிகளுக்கு ரூ.59.46 லட்சத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ரவி மீனா சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், தனித்துணை கலெக்டர் மோகனா, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
