/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தோண்டாமலே போடப்படும் ரோடுகளுக்கு தீர்வு என்ன பள்ளமாகும் வீடுகளால் பரிதவிக்கும் மக்கள்

ADDED : ஏப் 28, 2024 06:25 AM
விருதுநகர், : விருதுநகரில் தோண்டாமலே போடப்படும் ரோடுகளால் வீடுகள் பள்ளமாகி மழைக்காலங்களில் வீடுகளினுள் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் புகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் அப்போதைய அரசு தலைமை செயலர் இறையன்பு, ரோடு மேலே ரோடு போடக்கூடாது என்றும், ரோட்டை தோண்டி போட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 3 ஆண்டுகளில் இந்த விதிமுறையை மாவட்டத்தில் யாரும் முறையாக பின்பற்றவில்லை.
பேவர் பிளாக் ரோடுகள் மீதே தார் ரோடுகள் போடும் அளவுக்கு விதிமீறி செயல்படுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு நகர்ப்பகுதிகளில் போடப்பட்ட ரோடுகள் தோண்டாமலே போடப்பட்டன.இந்த செயலால் இப்போது ரோட்டின் அருகே வீடுகளை வைத்துள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
ரோடு உயர்வதால் குடியிருப்புகள் தாழ்ந்து விடுகின்றன. இதனால் மழை பெய்தால் வீடுகளுக்குள் கழிவுநீர் வருகிறது. இதனால் விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வரும் சூழல் உள்ளது. வாறுகாலின் கழிவுநீரும் வரும் சூழல் உள்ளது. அரசியல் பின்னணி கொண்ட ஒப்பந்ததாரர்கள் தான் இதற்கு காரணம். அவர்கள் விதிகளையும் மதிப்பதில்லை. அரசு அதிகாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதுமில்லை. ரோட்டை தோண்டி போட்டால் அதிக செலவு ஆகும் என்று மேம்போக்காக போடுகின்றனர்.
இவர்களுக்கு பெரிய அரசியல் புள்ளிகளின் செல்வாக்கு இருக்கிறது. பணிகள் தரமின்றி நடந்தால் கூட இறுதியில் பாதிக்கப்படுவது அதிகாரிகள் தான். இந்த போக்கு மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.