/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகர்புற நலவாழ்வு மையம் திறப்பது எப்போது மக்கள் எதிர்பார்ப்பு
/
நகர்புற நலவாழ்வு மையம் திறப்பது எப்போது மக்கள் எதிர்பார்ப்பு
நகர்புற நலவாழ்வு மையம் திறப்பது எப்போது மக்கள் எதிர்பார்ப்பு
நகர்புற நலவாழ்வு மையம் திறப்பது எப்போது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2024 04:47 AM

விருதுநகர்: விருதுநகரில் புதியதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்று வரை திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வராமல் பூட்டிகிடக்கிறது.
விருதுநகரில் தொடர்ந்து மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக புல்லலக்கோட்டை ரோட்டில் வி.எம்.சி. காலனியில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டது.
இதன் கட்டட பணிகள் முழுவதுமாக முடிந்து பல மாதங்களாகிறது. ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட நலவாழ்வு மையம் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்கனவே இட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் போதிய இடவசதி இல்லை.
இந்நிலையில் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ள நகர்புற நலவாழ்வு மையத்தை உடனடியாக திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

