/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளை ஈ தாக்கம் குறைய வாய்ப்பு
/
வெள்ளை ஈ தாக்கம் குறைய வாய்ப்பு
ADDED : மார் 13, 2025 04:29 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்று மதியம் பெய்த இரண்டு மணி நேர மழையால் அதிகரித்து வரும் வெள்ளை ஈ பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வு காணும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் சுற்று பகுதிகளில் ரூகோஸ் எனும் சுருள் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் தென்னை சாகுபடி அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இதன் பாதிப்பு அதிகரித்து கொய்யா, வாழை, மா, கத்தரி, பப்பாளி, கரும்பு என அனைத்து பயிர்களுக்கும் அதிக சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இலையின் அடியில் தங்கி பெருகி சாறுகளை உறிஞ்சி பயிர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சில பகுதிகளில் மட்டும் தென்பட்ட இப்பிரச்சனை தற்போது குடியிருப்புகள் முதல் அனைத்து இடங்களுக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவிட்டது.
நேற்று ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் 2 மணிநேரம் பெய்த கன மழையால் இதன் தாக்கம் தற்காலிகமாக குறைந்து இருக்கும் என விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இருப்பினும் நிரந்தர தீர்வு காண அரசினை எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து விவசாயி ரமேஷ்: வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியாமல் தென்னை உள்ளிட்ட அனைத்து சாகுபடியும் விவசாயிகளும் தவிப்பில் உள்ளோம்.
தோட்டங்களில் பசுமை காண முடியாமல் இலைகள் கருமையாக மாறி நிற்கிறது. பாதிப்பு தொடங்கும் போது கட்டுப்படுத்துவதற்காக அதிகம் செலவழித்து தற்போது கைவிட்டு விட்டோம். மழை போன்ற காலங்களில் இவை ஓரளவு கட்டுப்படுகிறது.
அரசு முழு மூச்சாக வேளாண் பல்கலை ஆராய்ச்சி, தனியார் நிறுவனங்கள் களம் இறங்கி ஒருங்கிணைந்த வகையில் இப் பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.