/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவி வெட்டிக்கொலை: காதல் கணவருக்கு ஆயுள்
/
மனைவி வெட்டிக்கொலை: காதல் கணவருக்கு ஆயுள்
ADDED : பிப் 28, 2025 01:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரிந்து வாழ்ந்த கணவரிடம் இருந்த குழந்தையை கேட்டு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மனைவி பிரியாவை 24, வெட்டி கொலை செய்த கணவர் மதீஸ்வரனுக்கு 27, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரை சேர்ந்தவர் மதீஸ்வரன். கொத்தனரான இவர் கோவையில் வேலை பார்க்கும்போது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு 4 வயது மகள் உள்ளார். இந்நிலையில் பிரியா, ஆடல் பாடல் தொழிலில் ஈடுபட்டார். இதனை விரும்பாத மதீஸ்வரன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லுாரில் வசித்து வந்தார்.
பிரியா 2018 ஜூன் 20ல் குழந்தையை கேட்டு ராஜபாளையம் போலீசில் புகார் தெரிவித்து விட்டு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்தபோது அங்கு வந்த மதீஸ்வரன் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். ராஜபாளையம் தெற்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.