ADDED : மார் 10, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கல்லூரணி ஊராட்சிக்கு உட்பட்டது கல்குளம் ஊருணி.
ஊருக்கு நடுவில் இருக்கும் இந்த ஊருணி முன்பு தண்ணீர் நிறைந்து இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஊரின் தண்ணீர் பிரச்சனை இன்றி இருந்தது. நாளடைவில் பராமரிப்பு இன்றி போனதால், ஊருணியில் தண்ணீர் சேர்வது குறைந்து போனது. இந்த ஊருணியில் கற்பாறைகள் உள்ளன. இவற்றை வெட்டி எடுத்து ஆழப்படுத்தினால், மழைநீர் அதிக அளவில் சேரும். மேலும் ஊருணியை சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டும். 40 ஆண்டுகளாக ஊருணி தூர் வாரப்படாமல் உள்ளது.
ஊருணியை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பது கல்லூரணி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.