/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதி அமையுமா: உழைக்கும் மகளிருக்கு தேவை வசதிகள்
/
மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதி அமையுமா: உழைக்கும் மகளிருக்கு தேவை வசதிகள்
மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதி அமையுமா: உழைக்கும் மகளிருக்கு தேவை வசதிகள்
மாவட்டத்தில் பணிபுரியும் பெண்கள் விடுதி அமையுமா: உழைக்கும் மகளிருக்கு தேவை வசதிகள்
ADDED : செப் 12, 2024 04:17 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பணிபுரியும் பெண்கள் விடுதி அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உழைக்கும் மகளிரான இவர்களுக்கு சரியான உணவு, தங்குமிட வசதி ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைத்தால் பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவுக்கு தொழில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளியூரில் இருந்து பணிபுரியும் அளவுக்கு தொழில்கள் இல்லை என்றாலும் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற தாலுகாக்களில் இருந்து வேலைவாய்ப்புள்ள தாலுகாக்களுக்கு பலர் பணிபுரிய செல்கின்றனர். கல்லுாரி முடித்த பெண்கள், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டே பணி செய்யும் பெண்கள் என பலர் உள்ளனர். இவர்கள் அதிக வாடகைக்கு வெளியில் தங்கும் சூழல் உள்ளது. மேலும் பாதுகாப்பற்ற சூழலை காரணம் காட்டி பெற்றோர் திருமணத்தை முடித்து வைத்து விடுகின்றனர். இதனால் பெண்கள் பணிபுரிவது குறையும் அபாயமும் உள்ளது.
தற்போது மாவட்டத்தில் சமூகநலத்துறை உரிமம் பெற்று 17 தனியார் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முழுக்க முழுக்க அரசு செயல்படுத்தும் பணிபரியும் பெண்கள் விடுதி அமைவது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா அமைகிறது. அடுத்தடுத்து புதிய தொழில்களும் அமைய உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த விடுதி அமைந்தால் மாத ஊதிய வரையறையை வைத்து கட்டணம் பெறப்படும். உணவு செலவுகள், மின்சாரம் உள்ளிட்ட பிற கட்டணங்களுக்கு பகிர்வு முறை பின்பற்றப்படும். இதனால் பணிபுரியும் பெண்கள் பயன்பெறுவர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே பணிபுரியும் பெண்கள் விடுதிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் துவங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இதை விரைந்து பெற்று பணிபுரியும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் விடுதி அமைக்க முன்வர வேண்டும்.