/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்கம்பங்களின் கழுத்தை நெறிக்கும் கேபிள் ஒயர்கள் ஏற முடியாது விழிபிதுங்கும் வயர்மேன்கள்
/
மின்கம்பங்களின் கழுத்தை நெறிக்கும் கேபிள் ஒயர்கள் ஏற முடியாது விழிபிதுங்கும் வயர்மேன்கள்
மின்கம்பங்களின் கழுத்தை நெறிக்கும் கேபிள் ஒயர்கள் ஏற முடியாது விழிபிதுங்கும் வயர்மேன்கள்
மின்கம்பங்களின் கழுத்தை நெறிக்கும் கேபிள் ஒயர்கள் ஏற முடியாது விழிபிதுங்கும் வயர்மேன்கள்
ADDED : மார் 02, 2025 05:56 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் நகர்ப்புற மின்கம்பங்களின் கழுத்தை நெறிக்கும் கேபிள் வயர்கள் அதிகரித்துள்ளதால் எவ்வாறு ஏறுவது என தெரியாமல் வயர்மேன்கள் விழிபிதுங்குகின்றனர்.
மாவட்டத்தின் மின் சேவையை மேம்படுத்த மின்கம்பங்கள் நடப்படுகின்றன. ஊரகப்பகுதிகளில் இருந்து நகர்ப்பகுதிகள் வரை இன்று பெரிய அளவில் மக்களுக்கு பயன்பட்டு வருகின்றன. முன்பு இணைய, டெலிபோன் சேவைக்காக பி.எஸ்.என்.எல்., உருளை கம்பங்கள் நடப்படும். தொலைக்காட்சி வருகைக்கு பின் அதன் மீதும், மின்கம்பம் மீதும் அனுமதி பெற்று தமிழக அரசு கேபிள் டிவி துறையினர் கேபிள் அமைத்து வந்தனர். 2016க்கு பின் இந்திய அளவில் இணைய சேவை உச்சத்தை தொட்டது.
இதற்கு பின் இணைய சேவைக்காக பல கம்பங்கள் நடுவது அதிகரித்தது. இதில் அனுமதிபெறாமல் மின்கம்பங்களை யொட்டிய வாறு கம்பம் அமைத்து கேபிள் இணைப்பதும், தொடர்ச்சியாக இது போன்று செய்வதும் அதிகரித்து வருகிறது. இது குறித்து வயர்மேன்கள் குரல் எழுப்பினாலும் இணைய சேவை வழங்குவோர் கண்டுகொள்வதில்லை.
கேபிள் டிவியை தாண்டி இப்போது நிறைய தனியார் கேபிள் வயர்களும் செல்கின்றன. இதனால் மின் பராமரிப்பு பணியின் போது மின்கம்பங்களில் ஏற வயர்மேன்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சுற்றி, சுற்றி வயராக சூழ்ந்திருப்பதால் எது எந்த வயரென தெரியாமல் தடுமாறும் சூழல் உள்ளது. மேலும் பணி செய்யும் போது இடையூறு ஏற்படுத்துவதுடன் விபத்தை ஏற்படுத்தும் அச்சமும் உள்ளது.
மின்வாரிய நிர்வாகம் இது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தாலும், தொடர் நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் மீண்டும் மின்கம்பங்களை யொட்டி தான் கேபிள் வயர்கள் செல்கின்றன. எனவே இதற்கு நிரந்த தீர்வு தேவை. மின் பராமரிப்பு பணிக்கு இடையூறு இல்லாதவாறு கிடைக்க செய்ய வேண்டும்.