ADDED : ஜூலை 29, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஜூன் 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் தாசில்தார்களில், சாத்தூர் தாசில்தார் லோகநாதன் முதல் பரிசும், சிவகாசி வடிவேல் 2ம் பரிசும்,ராஜபாளையம் ஜெயப்பாண்டி 3ம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருச்சுழி சிவக்குமார் முதல் பரிசும், சாத்துார் சீதாலெட்சுமி 2ம் பரிசும், வெம்பக்கோட்டை கிருஷ்ணவேணி 3ம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை தாசில்தார்களில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் முதல் பரிசும், சாத்துார் ராஜாமணி 2ம் பரிசும், திருச்சுழி ராஜாராம் பாண்டியன் 3ம் பரிசும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.