ADDED : ஜூன் 02, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி, ஜூன் 3
கோயம்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தொழிலாளி தமிழ்ச்செல்வன், 36, இவரது மனைவி சுதா, 30, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் திருச்சுழி அருகே பிள்ளையார்நத்தத்தில் வைகாசி பொங்கல் விழாவிற்கு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். மாலையில் உறவினர் வீட்டில் மின்சார பழுதை சரி செய்ய முயன்ற தமிழ்ச்செல்வன் மீது மின் சாரம் தாக்கியது. அருகில் இருந்த அவரது மனைவி அவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரையும் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.
திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
----
