ADDED : ஏப் 29, 2024 05:04 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: பேரையூர் அருகே சந்தையூரை சேர்ந்தவர் குருசாமி,64, இவர் விறகு வெட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
குளிப்பதற்காக அங்குள்ள கரிசல் கண்மாய்க்கு சென்றவர், எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி குருசாமி உடலை மீட்டனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
