ADDED : ஜூன் 05, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி, ஜூன் 6 -
நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, காவை தென்னிந்திய கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நடந்தது. பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாமுவேல் ஜோசப் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
