ADDED : ஜூன் 06, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு, ஜூன் 7-
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் பிளவக்கல் பட்டுப்பூச்சி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
புலிகள் காப்பக துணை இயக்குனர் ரவி மீனா முன்னிலையில், கலெக்டர் சுகபுத்ரா மரக்கன்றுகளை நட்டார். பின்னர் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
விழாவில் உதவி வனப் பாதுகாவலர் ஞானப்பழம், வனத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் கீழக்கோட்டையூரில் தோட்டக்கலை துறை சார்பில் கலெக்டர் சுகபுத்ரா மரக்கன்றுகள் நட்டார். துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
