ADDED : மார் 15, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே சடையம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 22. படந்தால் ஜங்ஷன் அருகே பாஸ் புட் கடையில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கடையின் கூரையில் இருந்த பிளக்ஸ் பேனரை கீழே இறக்கிய போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பேனர் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி வீசப்பட்டு மயங்கினார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தது தெரியவந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.