/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க.ஆட்சியில் போதை மருந்து, கஞ்சா பழக்கத்தால் சீரழிந்து வரும் இளைஞர்கள் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் பேச்சு

ADDED : செப் 18, 2024 04:11 AM
சாத்துார் : தி.மு.க.ஆட்சியில் இளைஞர்கள் போதை மருந்து, கஞ்சா போன்ற பழக்கங்களால் சீரழிந்து கூலிப்படைகளாகி வருகின்றனர், என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் பொதுக்கூட்டத்தில் கூறினார்.
அண்ணாதுரையின் 116வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெம்பக்கோட்டையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கூட்டத்தில் பேசியதாவது:
பழனிசாமி ஆட்சியில் அவரது சம்பந்தி, மாமன், மச்சான் என அனைவரும் ஊழல் செய்தனர். கார்பரேட் நிறுவனம் போல அவர் ஆட்சி நடத்தினார். அவர் ஆட்சியை விட மோசமான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெறுகிறது. தி.மு.க.ஆட்சியில் இளைஞர்கள் போதை மருந்து கஞ்சா போன்ற பழக்கங்களால் சீரழிந்து கூலிப்படைகளாகி வருகின்றனர்.
நாள்தோறும் தமிழகத்தில் கூலிப்படைகளால் கொலைகள் நடந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிகஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள் தி.மு.க.அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அரசுக்கு எதிராக தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்தியசாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்தஆண்டு தமிழகத்திற்கு சாலை மேம்பாட்டிற்கு ரூ 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கியதாகவும், தற்போதும் ரூ 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் வெற்றி பெற்ற 39 எம்.பி.களும் மத்திய அரசிடம் பேசி நிதி பெறாமல் நாடாளுமன்ற கேண்டினில் பன், பட்டர் ஜாம் சாப்பிடுகின்றனர். இவர்களால் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் இல்லை.
பழனிசாமி தி.மு.க.வின் பி டீம்மாக செயல்பட்டு வருகிறார்.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படும். அப்போது பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கண்டிப்பாக எடுப்போம் என்றார்.
அ.ம.மு.க. மாவட்ட, மாநில நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.