ADDED : ஆக 18, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 19-
சுக்கில நத்தம் கண்மாய் அருகில் ஒரு மாதத்திற்கு முன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பாளையம்பட்டி சிலோன் காலனி கக்கன் ஜி நகரைச் சேர்ந்த பிரசாத்தை 32, போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்களிடமிருந்த 8 கிலோ கஞ்சா வைத்திருந்த பையை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இருவரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் எஸ்.ஐ., முத்துக்குமார் மற்றும் போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான இருவரையும் நேற்று காலையில் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், கட்டங்குடியை சேர்ந்த லெக்குசாமி, 32, புளியம்பட்டியை சேர்ந்த அஜித்குமார்,28, என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த 1 கிலோ கஞ்சா மற்றும் எடை மெஷினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
____
____
