/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆட்கள் சேர்ப்பு முகாம்
/
108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆட்கள் சேர்ப்பு முகாம்
108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆட்கள் சேர்ப்பு முகாம்
108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் ஆட்கள் சேர்ப்பு முகாம்
ADDED : செப் 02, 2025 11:44 PM
விருதுநகர்; தமிழகம் முழுவதும் 108, 102 ஆம்புலன்ஸ்கள், இலவச அமரர் ஊர்தி டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் செப். 6ல் நடக்கிறது.
இதில் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து 24 முதல் 35 வயதிற்கு மிகாமல், 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தது மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 21,120 வழங்கப்படும்.
மேலும் மருத்துவ உதவி யாளர் பணிக்கு பி.எஸ்., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., லைப் சயின்ஸ் பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 21,320 வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044 288 88 060, 73977 24824, 99423 28254 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.