sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு

/

 ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு

 ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு

 ஆண்டாள் கோயிலில் 108 போர்வை வழிபாடு


ADDED : டிச 03, 2025 03:40 AM

Google News

ADDED : டிச 03, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி , பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு 108 போர்வை சாற்றி, வாசுதேவ பட்டர், ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பாலமுகுந்தனின் அரையர் சேவையும், வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தலும் நடந்தது.

பின்னர் நேற்று காலை 9:00 மணி வரை நடந்த உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us